4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது

by Staff Writer 20-11-2025 | 8:30 AM

Colombo (News 1st) 04 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 முதல் 34 வயதுக்கிடைப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு 12, கொழும்பு 15  மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.