வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை

by Staff Writer 19-11-2025 | 2:34 PM

Colombo (News 1st) நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்காள விரிகுடாவை அண்மித்து புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கண்டி, குருணாகல், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எசச்ரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் தெதுரு ஓயா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.