.webp)

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நெல்லியடி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து குறித்த இளைஞன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
பின்னர் வீட்டுக்கருகிலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நெல்லியடி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
