.webp)

Colombo (News 1st) மிதிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் மெகசின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
