ஜனாதிபதி - ITAK உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி - இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

by Staff Writer 19-11-2025 | 6:56 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இடையே இன்று(19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மாகாண சபை தேர்தல், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.