உனாகூருவ தம்பதியினர் கொலை விசாரணைக்கு 5 குழுக்கள்

உனாகூருவ தம்பதியினர் கொலை விசாரணைக்கு 05 பொலிஸ் குழுக்கள்

by Staff Writer 19-11-2025 | 2:41 PM

Colombo (News 1st)  தங்காலை, உனாகூருவ கபுஹேனே பகுதியில் தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு 05 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

நேற்று(18) மாலை 6. 50 அளவில் குறித்த தம்பதியினர் அவர்களின் வியாபார நிலையத்தில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் உனாகூருவ ஷாந்தவின் உறவினர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச்சென்றவர்கள் சீனிமோதர பகுதியில் மோட்டார் சைக்கிளை கைவிட்டுச் சென்றுள்ளனர்.