.webp)

Colombo (News 1st) ஹெரோயின் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதியொன்று பெந்தோட்டை கடற்கரையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று(18) காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பொதி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பேருவளை ஆழ்கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 02 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரொஷான் ஓலுகலவிற்கு கிடைத்த தகவலுக்கமைய கடற்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
