2 மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் வருகை

2 மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் வருகை

by Staff Writer 17-11-2025 | 6:49 PM

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளது.

பிரான்ஸை சேர்ந்த இருவர் இன்று(17) நாட்டிற்கு வருகை தந்ததன் பின்னர் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 02 மில்லியனை கடந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான UL-504 விமானம் ஊடாக இன்று பிற்பகல் 1.30-க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.