.webp)

Colombo (News 1st) காலி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்காக சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
