விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற சந்தேகநபர்

லொறியை திருடி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற சந்தேகநபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

by Staff Writer 16-11-2025 | 3:40 PM

Colombo (News 1st) கந்தானையில் லொறியொன்றை திருடி தப்பிச்சென்ற சந்தேகநபரால் ஏற்படுத்தப்பட்ட இரு விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை திருடி தப்பிச்சென்று கொண்டிருந்த போது லொறியின் உரிமையாளரும் உதவியாளரும் துரத்திப்பிடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் லொறியை நிறுத்தாமல் செலுத்தியமையால் 02 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்திற்குள்ளாக்கியுள்ளார்.

விபத்தின் போது 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.