.webp)
-603969-551241.jpg)
Colombo (News1st) பிபிசிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பிபிசி தனக்கு நட்டஈடு வழங்க மறுத்ததை அடுத்து ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.
அடுத்த வாரம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி வழக்கு தொடரப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையை திரிவுபடுத்தி 2024 ஆம் ஆண்டு ஒளிபரப்பியதாக பிபிசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிபிசி தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால், மன்னிப்பு கேட்டு, நட்டஈடு வழங்கக் கோரி வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
பிபிசி தமது உத்தியோகபூர்வ வலைத்தளத்திலுள்ள திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் பக்கத்தில் ஒரு குறிப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் மன்னிப்பு கோரியது.
பிபிசியில் ஒளிபரப்பான பனோரமா ஆவணப்படத்தை மீண்டும் ஒளிபரப்பப் போவதில்லை என பிபிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், ஒளிபரப்பிற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நட்டஈடு வழங்க பிபிசி மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில் பிபிசியின் பணிப்பாளர் நாயகமும், செய்திப்பிரிவின் தலைவரும் அண்மையில் தமது பதவிகளை இராஜினாமா செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
