CMG குழுமத்திற்கு சர்வதேச விருது

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்திற்கு சர்வதேச விருது

by Staff Writer 15-11-2025 | 7:53 PM

Colombo (News 1st) கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்திற்கு இந்தியாவின் மும்பையில் சர்வதேச விருதொன்று கிடைத்தது.

Game Changer பிரிவில் 2025 SAP ACE விருதை கெப்பிட்டல் மஹாராஜா குழுமம் சுவீகரித்தது.

2025 SAP ACE விருது கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்திற்கு கிடைத்த 2ஆவது ஏ.எஸ் விருதாகும்.

இந்த விருதை கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் சார்பில் நிறுவனத்தின் பிரதி பிரதான தகவல் தொழில்நுட்ப அதிகாரி தமாரா குடாலியனகே இந்தியாவின் மும்பையில் பெற்றுக்கொண்டார்.

இந்த விருது மூலம் டிஜிட்டல் மாற்றத்தின் சிறந்த முன்னேற்றம் பாராட்டப்பட்டுள்ளது.

73 நிறுவனங்கள் மற்றும் 9 உற்பத்தி தொழிற்சாலைக் கொண்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் பிரொஜெக்ட் நெக்ஸஸ் அதாவது சீ.எம்.ஜி மற்றும் எஸ்.ஏ. பீ  உடன் செயற்படுத்தப்பட்ட  ரயிஸ் RISE திட்டம் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு கூகுல் குளொவுட் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்பட்டுள்ளன.