விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சந்தர்ப்பம்

பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் சந்தர்ப்பம்

by Staff Writer 14-11-2025 | 7:42 PM

Colombo (News1st) உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெற்ற விசேட தேவையுடைய மாணவர்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் அனைத்துப் பீடங்களுக்கும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் டொக்டர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுமென அவர் கூறினார்.

இதுவரைக் காலமும் விசேட தேவையுடைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் 4 பீடங்களுக்காக மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.