.webp)

Colombo (News1st) வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்கானது மாத்திரமே என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கிறார்.
கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று(13) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
கறுப்பு குற்ற அரசாங்கம் முழுமையாக ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
2028 ஆம் ஆண்டு கடன்களை மீளச் செலுத்த முடியாது என பெரும்பாலானவர்கள் கூறி வரும் நிலையில் 2028 ஆம் ஆண்டு அந்த கடனை மீள செலுத்த முடியுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.
கடனை செலுத்தக்கூடிய வகையிலான பொருளாதாரத்தை தாம் கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டார்.
வரவு - செலவு திட்ட பற்றாக்குறை 6 தசம் 7 க்கு கீழ் கொண்டுவரப்படுமென எதிர்வுகூறப்பட்ட நிலையில் அதனை 5 தசம் 2 ஆக கொண்டுவர முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் முதல் தடவையாக இத்தகையதொரு வரவு - செலவு திட்டம் கொண்டுவரப்படுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
