.webp)

Colombo (News1st) இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்காக தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் இன்று(13) அறிக்கை வௌியிட்டு அறிவித்தது.
இன்று நடைபெறவிருந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி நாளைய தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் சகல போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளன.
