பஸ் - டிப்பர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஸ் - டிப்பர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 13-11-2025 | 8:28 AM

Colombo (News 1st) மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் ஹுங்கம கிவுல சந்தியில் நேற்றிரவு(12) பஸ் மற்றும் டிப்பர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் டிப்பர் சாரதி உயிரிழந்த நிலையில் பஸ்ஸின் சாரதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறையிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த பஸ் மற்றும் தங்காலை நோக்கி பயணித்த டிப்பர் ஆகியனவே மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.