.webp)
-551167.jpg)
Colombo (News 1st) பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு எதிர்காலத்தில் காட்சிப்படுத்தப்படும் என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
