பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்ப கோரும் வீரர்கள்

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானிலிருந்து மீண்டும் நாடு திரும்ப கோரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

by Staff Writer 12-11-2025 | 9:37 PM

Colombo (News 1st) பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பாதுகாப்பு காரணமாக மீண்டும் நாட்டிற்கு வருவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று(11) பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றது.

போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதானத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக நேற்று தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்தே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இலங்கை - பாகிஸ்தான் தொடர் திட்டமிட்ட வகையில் தொடருமெனவும் எவரேனும் வீரர் நாடு திரும்பினால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அனுப்புவதோடு அவ்வாறு நாடு திரும்பும் வீரர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.