.webp)

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட 21 கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா - பெம்முல்ல பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
