ஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரசன்னவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணை

by Staff Writer 12-11-2025 | 7:15 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று(12) உத்தரவிட்டார்.

சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50,000 ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் வௌிநாட்டு பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இன்று(12) முற்பகல் கைது செய்யப்பட்டார்.

சுற்றுலா அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட நேரடி மருத்துவ காப்புறுதிக்காக சட்டத்திற்கு முரணான வகையில் தனியார் இடைத்தரகர் நிறுவனத்தை நியமித்து அதனூடாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு  47 இலட்சத்து ஐம்பதாயிரத்து 828 ரூபா 72 சதம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.