பருத்தித்துறை கடலில் 14 இந்திய மீனவர்கள் கைது

பருத்தித்துறை கடலில் 14 இந்திய மீனவர்கள் கைது

by Chandrasekaram Chandravadani 10-11-2025 | 2:41 PM

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பை அண்மித்து நேற்றிரவு(09) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பயணித்த ட்ரோலர் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.