.webp)
-551022.jpg)
Colombo (News 1st) இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் Faisal bin Farhan ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வருடாந்த உலக சுற்றுலா மாநாட்டில் பங்கேற்பதற்காக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கான உகந்த சூழல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சவுதியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இருநாட்டு வர்த்தக சபைகளுக்கும் இடையில் ஸ்தாபிக்கப்படவுள்ள முதலாவது வர்த்தக பேரவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே, பலஸ்தீன மோதலில் நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் சவுதி அரேபியாவின் முயற்சிகளை பாராட்டிய வௌிவிவகார அமைச்சர், அதற்கான இலங்கையின் ஒத்துழைப்புகளை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
இலங்கை - சவுதி அரேபியா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 50 ஆண்டுகள் நிறைவையொட்டி வௌியிடப்பட்ட முத்திரை, சவுதி வௌிவிகார அமைச்சரால் அமைச்சர் விஜித ஹேரத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
