இரட்டை கொலை வழக்கில் 6 பேருக்கு மரணதண்டனை

இரட்டை கொலை வழக்கில் 6 பேருக்கு மரணதண்டனை

by Staff Writer 10-11-2025 | 7:03 PM

Colombo (News 1st) இரட்டைக் கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 06 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர ஸ்ரீமித் மெண்டிஸ் விஜேசேகர இந்த தீர்ப்பை அறிவித்தார்.

2015 ஏப்ரல் 14ஆம் திகதி பதியதலாவ பகுதியில் மூவர் மீது தாக்குதல் நடத்தி அவர்களில் இருவரின் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.