.webp)
-550966.jpg)
Colombo (News 1st) மினுவாங்கொடை - அளுதவெல பகுதியிலுள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இருவர் பந்தைப் பிடிக்க முயன்ற போது நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
