நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 09-11-2025 | 2:39 PM

Colombo (News 1st) சிகிரியா பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 05 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.