.webp)

Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து வினாத்தாள்களும் பரீட்சை மத்திய நிலையங்களில் கையளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் 340,525 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
உயர்தரப் பரீட்சை நாளை(10) முதல் அடுத்த ஜனவரி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சை மத்திய நிலையங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
