விசேட தேவையுடையவர்களுக்காக 10 பஸ்கள் - SLTB

விசேட தேவையுடையவர்களுக்காக 10 பஸ்கள் இறக்குமதி - இலங்கை போக்குவரத்து சபை

by Staff Writer 06-11-2025 | 5:56 AM

Colombo (News 1st) விசேட தேவையுடையோருக்காக 10 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அடுத்த மாதமளவில் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

குறித்த பஸ்களுக்காக 420 மில்லியன் ரூபா செலவாகின்றது.

விசேட தேவையுடையவர்களுக்கு அவசியமான வசதிகள் குறித்த பஸ்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

முதியோர்களுக்கான தேசிய செயலகம், இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை, கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு பிரதான பஸ் நிலையங்களை கேந்திரமாகக் கொண்டு 10 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.