.webp)

Colombo (News 1st) மெக்ஸிக்கோ ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo தாம் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டடத்திற்கு நடந்துசென்ற சந்தர்ப்பத்தில் வீதியிலிருந்த நபர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.
இதன்போது பின்னால் வந்த நபரொருவர் ஜனாதிபதியின் கழுத்தில் முத்தமிட முயற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அந்த இடத்திலிருந்த ஏனைய பெண்களுக்கும் குறித்த நபரால் இடையூறு ஏற்பட்டிருந்ததாக ஜனாதிபதி தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முதல் குடிமகளே இவ்வாறு பொது இடங்களில் துன்புறுத்தப்படுகிறார் எனின் ஏனைய பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
