.webp)

Colombo (News 1st) யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நீர் தேங்கிநிற்பதால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகளை அடுத்த வருடம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் S.லெனின்குமார் முன்னிலையில் இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களைப் பரிசோதனை செய்து முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான பாதீடு, அகழ்வுப்பணியின் நிபுணத்துவக் குழுவில் இடம்பெறுகின்ற எழுவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
மனித எச்சங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
