தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய பிரதானி

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய பிரதானியாக நலிந்த நியங்கொட நியமனம்

by Staff Writer 28-10-2025 | 8:00 PM

Colombo (News 1st) தேசிய புலனாய்வு பிரிவின் புதிய பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற எயார் வைஸ் மாஷல் சம்பத் துய்யகொந்தாவினால் புதிய தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானிக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அவர் தனது கடமைகளை இன்று(28) ஆரம்பித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

இலங்கை இராணுவத்தில் சுமார் 35 வருட காலம் பணியாற்றிய மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெறும்போது அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜெனரலாகவும் பொதுச்சேவை படையணியின் கட்டளை தளபதியாகவும் செயற்பட்டார்.

நலிந்த நியங்கொட இராணுவ சேவையில் ஆற்றிய சேவைகளுக்காக ரணவிக்கிரம, ரணஷூர, விஷிஷ்ட சேவா உள்ளிட்ட பல பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்