லொறி - கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

லொறி - கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 27-10-2025 | 2:08 PM

Colombo (News 1st) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 69ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியின் பின்புறம் கார் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.