தாய்லாந்து - கம்போடியா இடையே சமாதான ஒப்பந்தம்

தாய்லாந்து - கம்போடியா இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்து

by Chandrasekaram Chandravadani 26-10-2025 | 2:08 PM

Colombo (News 1st) தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருநாடுகளும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தாய்லாந்து, கம்போடியா மற்றும் மலேசிய பிரதமர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதன்பின்னர் கம்போடியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்திலும் தாய்லாந்துடன் கனிம ஒப்பந்தத்திலும் ஈடுபடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

எல்லை பிரச்சினைகள் காரணமாக கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் வலுப்பெற்றது.

மோதல்களை நிறுத்துவதற்கு இருநாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இருநாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.