.webp)
Colombo (News 1st) பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy-க்கு 05 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்திற்கு நிதியளித்த குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Nicolas Sarkozy-யின் அமைச்சரவையில் பணியாற்றிய சில அமைச்சர்கள் மீதும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
70 வயதான Sarkozy, 2007 முதல் 2012 வரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.