தொடரும் கனமழையால் 24 ரயில் சேவைகள் இரத்து

தொடரும் கனமழையால் 24 ரயில் சேவைகள் இரத்து

by Staff Writer 20-10-2025 | 6:46 PM

Colombo (News 1st) மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மலையக மார்க்கத்தில் இன்று(20) 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் பதுளை நோக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களும் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பதுளை மற்றும் கண்டியிலிருந்து புறப்படும் ரயில்கள் பேராதெனிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  

கண்டி ரயில் நிலையத்திலிருந்து நாளை(21) காலை 4.30, 5 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த அலுவலக ரயில் மற்றும் காலை 6.15-க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த நகர்சேர் கடுகதி ரயில் ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.