வாழைச்சேனை வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

வாழைச்சேனை வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 19-10-2025 | 1:33 PM

Colombo (News 1st) வாழைச்சேனை - காவத்தமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காவத்தமுனை பகுதியிலுள்ள குறுக்கு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த 09 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.