.webp)
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமாரவின் முக்கிய உதவியாளரொருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பகுதியிலுள்ள விகாரையொன்றில் கப்புறாளையாக செயற்பட்ட ஒருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் 36 பேர் போதைப்பொருள் கடத்தலூடாக ஈட்டிய 33 கோடியே 66 இலட்சம் ரூபா குறித்த சந்தேகநபரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் ஊடாக லொக்கு பெட்டியின் ஆலோசனைக்கமைய குறித்த பணம் பல்வேறு கடத்தல்களுக்காக மேலும் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
லொக்கு பெட்டி தற்போது பூஸ்ஸ அதிபாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து அண்மையில் கைபேசி கைப்பற்றப்பட்டதுடன், குறித்த சந்தர்ப்பத்தில் லொக்கு பெட்டியினால் அந்த கைபேசி அழிக்கப்பட்டிருந்தது.