GR/11 வகை பொன்னி சம்பா இறக்குமதிக்கு அனுமதி

GR/11 வகை பொன்னி சம்பா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 14-10-2025 | 6:12 PM

Colombo (News 1st) GR/11 வகை பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை(15) முதல் மாதாந்தம் ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் வரையிலான GR/11 வகை பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் வருடாந்த அரிசிக்கான நுகர்வு 2.46 மில்லியன் தொன்னாக காணப்படுவதுடன், அவற்றில் கீரி சம்பாவிற்கான நுகர்வு 246,000 மெட்ரிக் தொன் ஆகும்.

இதேவேளை, நச்சு போதைப்பொருளை ஒழிப்பதற்காக தேசிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்புப்பணியை அவசர மற்றும் விரைவான தேசிய திட்டமாக ஆரம்பிக்கவும் தேசிய வழிகாட்டுதல் குழுவை ஸ்தாபிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.