.webp)
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் குருணாகல் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பொத்துஹெர பகுதியில் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.