மனுஷ நாணாயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு

மனுஷ நாணாயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு

by Staff Writer 14-10-2025 | 3:44 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார தாக்கல் செய்த  முன்பிணை மனுவை நீதிமன்றம் இன்று(14) நிராகரித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து முன்பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் நாளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவாரென மனுஷ நாணாயக்கார சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஸ்திக்க தேவேந்திர தெரிவித்தார்.

இஸ்ரேலில் விவசாயம் சார்ந்த  தொழில்களுக்காக ஆட்களை அனுப்பும் விடயத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் தமக்கு தீங்கு விளைவிக்கும் நோக்குடன் தாம் 
கைது செய்யப்படவுள்ளதால் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார முன்பினை மனுவை தாக்கல் செய்திருந்தார்.