15,000 வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

தம்புத்தேகம - முதுனேகம பகுதியில் 15,000 வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 14-10-2025 | 3:29 PM

Colombo (News 1st) தம்புத்தேகம - முதுனேகம பகுதியில் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் சுமார் 15,000 வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரையில் 2,110 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று(13) முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது T-56 ரக தோட்டக்கள் 860, விமானங்களை தகர்ப்பதற்கான 4 தோட்டாக்கள் மற்றும் கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் 93 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.