.webp)
Colombo (News 1st) திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்கள வித்தியாலயம் மற்றும் மொரவெவ வடக்கு கிராமத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டமைப்பு மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (14) கையளிக்கப்பட்டது.
வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கம்மெத்தவின் மற்றுமொரு செயற்றிட்டமாக இந்த திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு - 03ஐ சேர்ந்த ஓசிஸ் தாவர மற்றும் விதை ஏற்றுமதி வர்தத்த நிறுவனத்தின் உரிமையாளர் சித்ரா டி சில்வா இந்த திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்றார்.
நிகழ்வில் நியூஸ் ஃபெஸ்ட் பிரதி முகாமையாளர் நாகலிங்கம் ஜெகநாத்கண்ணா, கம்மெத்த V-Force அமைப்பின் தேசிய அமைப்பாளர் கிஹான் உத்யோக, திருகோணமலை மாவட்ட செயலாளர் ஹேமந்த குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.