.webp)
Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சிலர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களை நாளை(15) நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி என கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி பொலிஸாரால் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.