மொரகஹகந்தவில் மேலும் தோட்டாக்கள் மீட்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அன்மித்து மேலும் தோட்டாக்கள் மீட்பு

by Staff Writer 13-10-2025 | 12:30 PM

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் போது விமானங்களை அழிக்கின்ற  2 ஆயுத ரவைகள் உள்ளிட்ட 1,163 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்  போது குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

T-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 895 தோட்டாக்கள், 71 மில்லிமீட்டர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 116 தோட்டாக்கள், 41 மில்லிமீட்டர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்கள், 78 மில்லிமீட்டர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள், 84.5மில்லிமீட்டர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்கள் மற்றும் 134 ஜி.எம்.பி.ஜி தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டக்களை எவரேனும்  குறித்த இடத்தில் மறைத்து வைத்தார்களா  என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இயங்கும் மத்திய நிலையத்திற்கருகில் இன்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.