செம்மணி அகழ்வுக்கு 19 மில்லியன் ரூபா

செம்மணி மனித புதைகுழியின் 2ஆம் கட்ட அகழ்வுகளுக்கு நீதி அமைச்சிடமிருந்து 19 மில்லியன் ரூபா

by Staff Writer 13-10-2025 | 6:35 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம்​ செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கான பாதீட்டுக்காக நீதி அமைச்சினால் 19 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.