கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பிணை

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பிணை

by Staff Writer 13-10-2025 | 2:27 PM

Colombo (News 1st)  கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பிணை

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியொருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) காலை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த தரப்பினர், பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதி வழங்குமாறு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கான்ஸ்டபிள் சார்பில் மன்றில் 4 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவர்  விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணையை மத்தியஸ்த சபையிடம் முன்வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.