மாபோலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மாபோலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 12-10-2025 | 11:47 AM

Colombo (News 1st) வத்தளை - மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டடத்தின் மேல்தளத்தில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த உயரழுத்த மின்கம்பி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளையைச் சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.