விமல் வீரவங்சவிற்கு மீண்டும் அழைப்பு

தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு விமல் வீரவங்சவிற்கு மீண்டும் அழைப்பு

by Staff Writer 12-10-2025 | 6:48 AM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று(12) காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

'பெலியத்தே சனா' என்பவர் பற்றி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்த கருத்து தொடர்பான மேலதிக விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 'பெலியத்த சனா' எனப்படும் வீரசிங்ககே சரத் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டு உறுப்பினர் என விமல் வீரவங்ச பகிரங்கமாக ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பாக தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.