இலங்கைக்கான 5ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான கடன் வசதி திட்டத்தின் 5ஆவது தவணைக்கு IMF அனுமதி

by Staff Writer 09-10-2025 | 12:49 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கை இடையிலான கடன் வசதி திட்டத்தின் 5ஆவது தவணைக்கு ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இலங்கைக்கு 347 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.

ஊழியர் மட்ட இணக்கப்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அனுமதி கிடைத்தற்கு பின்னர் குறித்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.