இந்திய உயர்ஸ்தானிகர் -தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

by Staff Writer 09-10-2025 | 8:02 AM

Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பிரதி தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்களாக வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்தியா முன்னெடுத்துள்ள பல்வேறு இருதரப்பு முயற்சிகள், இந்திய வம்சாவழி மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் அண்மைக்கால அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் வடக்கு, கிழக்கில் இந்தியா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.