.webp)
Colombo (News 1st) Update : 4.45pm - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபாலிகா சமன்குமாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபாலிகா சமன்குமாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ஸவிற்கு இழப்பீடாக 88 இலட்சம் ரூபாவை செலுத்துவதற்கு அனுமதி வழங்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.